Sunday, 27 December 2015

மந்திரங்களை உச்சரிக்கும் இடம் சுத்தமானதாக இருக்க வேண்டும். பூசை அறை சிறப்பானதாக இருக்கும். பூசை அறையில் நல்ல நறுமணமுள்ள ஊதுபத்தி பொருத்தி அறை மனதை மயக்கும் நறுமணமுள்ளதாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான நறுமணம் பிடிக்குமாதலால் அவரவர்கள் தங்களிற்கு பிடித்த நறுமணத்தினை தேர்ந்து எடுத்துக் கொள்வது நல்லது. யட்சிணி, மோகினி போன்ற தேவதைகளிற்கு மல்லிகை மணம் பிடிக்குமாதலால் அவற்றிற்கு மல்லிகை மணமுள்ள ஊதுபத்தி உயோகிப்பது சிறப்பு. அதேபோல் அந்தந்த தெய்வங்களிற்கு, தேவதைகளிற்கு பிடித்த நறுமணத்தினை தெரிந்து உபயோகிக்க வேண்டும். சாம்பிராணிபுகைக்கு தேவதா ஆகர்ஷ்ண சக்தி உள்ளதால் சாம்பிராணி தூபம் உபயோகிப்பது சிறப்பானது.

மந்திரங்களைத் தெரிவு செய்யும் போது

மந்திரங்களைத் தெரிவு செய்யும் போது சாத்வீக மந்திரங்களாக இருப்பது நல்லது. அகோர மந்திரங்கள் முறைப்படி வழிபாடு செய்யாவிட்டால் நமக்கு எதிர்விளைவுகளைக் கொடுத்து விட வாய்ப்புள்ளது. மந்திர உச்சாடணம் செய்வதற்க முன்னர் வினாகரை முறைப்படி வழிபாடு செய்து எந்த தடங்களும் இல்லாமல்எடுத்த செயல் வெற்றிகரமாக முடியஅருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பின்னர் தான் மந்திர உச்சாடண வழிபாடடினை ஆரம்பிக்க வேண்டும். முதலில் மந்திரத்திற்குரிய தேவதையிற்குமலர், தூப, தீப, நைவேத்திய ஆராதனைசெய்த பின்னர் மந்திரங்களை உருக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். உரிய எண்ணிக்கை உருக் கொடுத்த பின்னர் கற்பூர ஆரத்தி காட்டி பூசையினை நிறைவு செய்ய வேண்டும். உருக் கொடுக்கும் எண்ணிக்கையை மனதில் நிறுத்திக் கொள்ள கை விரல்களின் கணுக்களை கொண்டு கணிக்கலாம் அல்லது உரிய ஜெப மாலையை உபயோகிக்கலாம். ஜெப மாலைகள் மந்திரத்தின் தன்மைக்கேற்ப ருத்திராட்சம், ஸ்படிகம், மிளகு, தாமரைக் கொட்டை, துளசி என மாறுபடும். ஜெப மாலையின் மணியின் எண்ணிக்கை 108 உடையதாக இருக்க வேண்டும்.
மந்திரங்களை ஒரு குருவின் மூலமாக உபதேசம் பெற்று ஜெபிப்பதே சிறப்பு. தகுந்த குருவினால் மட்டுமே மேலே சொல்லப்பட்ட சகல விடயங்களிலும் சரியான வழியினைக் காட்ட முடியும்.

தவறான மந்திரம்

ரிஷி அனுஸ்டானம் இல்லாத மந்திரம் ஆயுளைக் கெடுக்கும். தவறான உச்சரிப்பு, தவறான ஒலி வியாதியைக் கொடுக்கும். தேவாதீனமான மந்திரங்கள் செல்வத்தை அழிக்கும். ஆயுதம், வஸ்திரமின்றி செய்யப்படும் மந்திரங்கள் புத்திர, பந்துக்ளைநாசம் செய்யும். முறைப்படி தெரிந்து முறைப்படி ஜெபிக்கப்படும் மந்திரங்களே சகல நன்மைகளையும் இம்மைக்கும், மறுமைக்கும் தரும்.

பஞ்சாட்சர மந்திரம்

பஞ்சாட்சர மந்திரம் என்பது பஞ்சபூதங்களையும் கட்டுப்படுத்தும்மந்திரமாகும். ஒவ்வொரு பூதத்திற்கும் எழுத்து, வரிவடிவம் உள்ளது. அதாவது ந – ம –சி – வ – ய என்ற எழுத்துகளாகவும்,வட்டம், ஐங்கோணம், அறுகோணம், சதுரம், முக்கோணம் போன்ற வரிவடிவங்களாயும் உள்ளன. இவை அவற்றிற்குரிய உலோகங்களில் அவற்றிற்குரிய இடத்தினைப் பெறும் போது பஞ்சாட்சர யந்திரம்ஆகிறது உலோகங்கள் பண்டைய கால கருத்துப்படி இரும்பு, செம்பு, வெள்ளி, தங்கம், வங்கம், துறா, வெண்கலம், ஈயம், நாகம் என்ற 9 உம் ஆகும். இந்த உலோகங்களில் தகடுகள் செய்து அவற்றில் மந்திரஉயிர் எழுத்துக்களை, வடிவங்களை அவற்றிறகுரிய இடங்களில் எழுத வேண்டும. குறிக்கப்பட்ட மந்திரங்களிற்கு குறிப்பிட்ட உலோக தகட்டினயே உபயோகப்படுத்த வேண்டும் என்ற விதியுள்ளது. இப்படி செய்தால்தான் மந்திரம் சரியான முறையில் வேலை செய்யும்.
மந்திரங்களைப் ஜெபித்து அதன் சக்தியை யந்திரங்களில் பதிவு செய்து பாதுகாத்து முறைப்படி பூசை செய்து வணங்கி வந்தால், நாம் பல நன்மைகளை இதன் மூலம் பெறமுடியும்.
----------------------------------------------------------------------------------------------------
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே (அகத்தியர்) மனதை செம்மைப்படுத்த மந்திரம் அவசியம் என்பதனை அகத்தியர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
------------------------------------------------------------------------------------------------
ஒரு செயலை நினைத்து அந்த செயலிற்குரிய மந்திரத்தை முறைப்படி குரு முகமாக தீட்சை பெற்று முறைப்படி ஜெபித்து வந்தால் அந்த காரியம் நினைத்தபடி சித்தியாகும். மந்திரம் என்பது ….. அதன் செய்முறைதான் மாந்திரீகமாகும். தேவதைகளிற்குரிய மந்திரங்களை குரு முகமாக தீட்சை பெற்று அதற்குரிய நியமத்துடன் ஜெபித்து வந்தால் அந்த தேவதைகள்நேரில் பிரத்தியட்சமாகி மந்திர ஜெபம் செய்பவரிற்கு சகல சித்திகளையும் அருளும். மந்திரங்கள் ஏழு கோடி எனக் கூறுவர். அவை பீஜம், பிரணவம், கீலகம், ரஷ~p என பல வகைப்படும். மகா மந்திரங்களை மந்திரமுணர்ந்த குருவிடமிருந்து தீட்சை மூலமாகவே தெரிந்து கற்றுக் கொள்ள வேண்டும். அவற்றுள் முக்கியமான சாந்த மந்திரங்கள் பஞ்சாட்சரி, தூல பஞ்சாட்சரி, சடாட்சரி, ஏகாட்சரி, பஞ்ச பிரம்மம், மாலா, சூடாமணி, சிந்தாமணி, திரிபுரசுந்தரி, அன்னபூரணி, மிருத்யுஞ்சு ஜெயம், தட்சிணாமூர்த்தி, கணேசர், விஷ்ணு, ருத்திரன் போன்றன. மந்திரங்களை மந்திர நிகண்டு, கொங்கணவர் நடு படைக் காண்டம், திருமந்திரம், அகத்தியர் மாந்திரீக காவியம் மற்றும் பல சித்தர்களின் நூல்களில் தெளிவாக காணலாம்.
 
------------------------------------------------------------------------------------------------------------
மந்திரங்களைப் ஜெபித்து அதன் சக்தியை யந்திரங்களில் பதிவு செய்து பாதுகாத்து முறைப்படி பூசை செய்து வணங்கி வந்தால், நாம் பல நன்மைகளை இதன் மூலம் பெறமுடியும். சக்தி எற்றப்பட்ட யந்திரங்களின் வலிமையினால் சகல செயல்களையும் செய்ய முடியும். அப்படிப்பட்ட செயல்களில் நல்லவை, கெட்டவை இரண்டுமேயுண்டு. சொல்லப்போனால் மந்திரம் என்பது ஒரு வகை சக்தியாகும். நெருப்பு என்ற சக்தி எப்படி தீபமாக இருந்து ஒளியைக் கொடுத்து நமக்கு நல்ல செயல்களைச் செய்கிறதோ அதோ போல் மந்திரங்களும் நல்லவற்றை செய்ய வல்லன. அதே நெருப்பு ஒரு வீட்டினை கொளுத்தும் போது எப்படி தீய செயலை செய்கிறதோ மந்திரங்களும் அதே போல் தீய செயல்களையும் செய்ய வல்லன.
நெருப்பினைக் கொண்டு தீபத்தினைஏற்றுவதா அல்லது வீட்டினைக் கொளுத்துவதா என்பதினை தீர்மானிப்பது நெருப்பு அல்ல மனிதர்களாகிய நாம் தான். அதே போலத் தான் மந்திரங்களையும் நல்ல காரியத்திற்கு நாம் பயன்படுத்தினால் அது நன்மையையும் தீய காரியத்திற்கு பயன்படுத்தினால் அது தீமையையும் தர வல்லது.
மாந்திரீக சக்தி மூலம் நாம் 1. வசியம் 2. மோகனம் 3. ஆகர்சணம் 4. தம்பனம் 5. பேதனம் 6. வித்வேசணம்7. உச்சாடனம் 8. மாரணம் என்ற எட்டு வித (அஸ்டகர்மம்.) செயல்களையும் செய்யலாம். அஸ்டகர்மத்தில் உள்ள ஒவ்வொரு செயலிற்கும் மந்திரங்கள், பூசை முறைகள், அமரும் இருக்கை, பூசைக்குரிய மலர்கள், ஜெபத்திற்குரிய மலர்கள், ஜெபத்திற்குரிய மணிகள்(மாலைகள்), யந்திரம் அமைப்பதற்குரிய தகட்டின் உலோகம் போன்றன தனித்தனியே அமையும்.
யந்திரங்களில் பதிவு செய்த சக்தியானது குறிப்பிட்ட காலம்வரைதான் நிலைத்திருக்கும். இந்த கால அளவானது அதில் பதிவாகியுள்ள உச்சாடனத்தின் அளவு, உருக் கொடுத்த முறை, உருக் கொடுத்த மாந்திரீகனின் மன ஒருமைப்பாடு, யந்திரம் எழுதிய உலோகத் தகட்டின் அளவு, சித்தியான பின்பு அதனை வணங்கும் முறையைப் பொறுத்து அமையும்.
----------------------------------------------------------------------------------------------------------
மந்திரம் என்பது மனதை ஒருமுகப்படுத்தும் ஒரு முக்கிய சாதனமாகும். பெரும்பாலான மந்திரங்கள் தெய்வ வழிபாட்டிற்குரியன ஆகும். சில மந்திரங்கள் நோயைக் கட்டுப்படுத்தவும், சில துஸ்ட மிருகங்களை அடக்கவும், சில பகையை வெல்லவும் பயன்படும். நமது சித்தர்கள் இவற்றை மானிடர்களின் நலனைக் கருதியே வெளிப்படையாக வெளியிட்டனர். ஆனால் பிற்காலத்தில் மனிதன் தனது சுய லாபத்திற்காக மனிதர்களைக் கொல்லுவும். அவர்களை சீரழிக்கவும் அதனை பிரயோகிக்க கற்றுக் கொண்டான். இதனாலேயே மாந்திரிகம் என்றாலே மக்கள் மத்தியில் ஒருவித பயமும், அதன் மீது ஒரு வெறுப்பும் ஏற்பட்டுள்ளது.
மந்திரம் என்பது ஒருவகை சக்தியாகும். ஒலி வடிவிலானது. ஒலியலைகளைக் கொண்டு செயலாற்றும் தன்மையுடையது. மனதில் நினைத்ததை நினைத்தபடியே செயலாற்ற வைக்கும் சக்தி கொண்டது. அந்த சக்தியை எத்தகைய செயலையும் செய்து சாதிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளமுடியும். இதனைக் கொண்டு சாதிக்க முடியாதுமிக மிக அரிது என்றே சொல்லலாம்.
மனித எண்ணத்தினது சக்தி மற்ற எல்லா சக்திகளையும் விட வலிமையானது வேகமும் அதிகமானது என்று தற்கால விஞ்ஞானம் ஒப்புக்கொண்டுள்ளது. ஒலியைவிட விரைவானதும் சக்தி வாய்ந்ததும் சிந்தனா சக்தி எனப்படும் மனோசக்தி ஆகும். இந்த சக்தியை எளிதில் தோற்றுவிக்க உதவுதே மந்திரங்களாகும். மற்றவர்களின் எண்ணங்களை அறிவது, எண்ணங்களை ஈடேறச் செய்வது, ஹிப்னோடிசம், மெஸ்மரிசம் செய்வது போன்ற அனைத்திற்கும் மூலமே மந்திரங்களும் அவற்றின் சக்தியுமேயாகும். இந்த மந்திரங்களை பயன் படுத்தும் கருவியாக யந்திரங்கள் செயல்படுகின்றன. இந்த வழிமுறைகள் தொன்று தொட்டு நமது தேசத்தில் பயன்பட்டு வந்துள்து.மந்திர சாஸ்திரத்தை முறைப்படி அறிந்தவர் மிகச்சிலரே. இந்த சாத்திரம் அறிவியலானது. இதனை தவறான வழியில் பயன் படுத்தாமலும், தீய செயல்களிற்குபிரயோகப்படுத்தமலும் இருப்பதற்காகவே இதனை முழுமையாக யாரும் அடுத்தவரிற்கு கற்றுத் தருவதில்லை.
மந்திர சாத்திரத்தினை ஒரு மந்திர சாத்திரம் முழுமையாக கற்றறிந்த குருவிடத்தே கற்றுக் கொள்ள முடியும். குருவில்லாமல் கற்றுக் கொள்ளும் எதுவும் சிறப்பினைத் தராது. மந்திர சாத்திரத்திற்கு முக்கியமானது எழுத்துக்களும் அவற்றிற்கான ஒலி அலைகளுமே ஆகும். இப்படி எழுத்துக்களை கொண்டு செயலாற்றும் மந்திரங்களை “வர்ணாத்ம சப்தம்” என வழங்குவர். வெறும் ஒலியலைகளை மட்டும் கொண்டும் மந்திரங்களை செயலாற்றச் செய்ய முடியும். இந்த வகை மந்திரங்களை “துவனியாத்ம சப்தம்” என வழங்குவர்.
பஞ்ச பூதங்களில் முதன்மையானதாக கருதப்படும் ஆகாயத்திலிருந்தே மற்றய நான்கு பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று தோன்றியதாக கருதப்படுகிறது. மந்திர ஒலியானது பஞ்ச பூதங்களிலும் பாயக் கூடியது. நாம் எழுப்பும் மந்திர ஒலியானதுகாற்றில் கலந்து, ஆகாயத்தில் பரவி மற்றய பூதங்களையும் தாக்கிசெயல்படுகிறது. மந்திரங்களில் பயன்படும் எழுத்துக்கள் உயிர்ப்பு சக்தி கொண்டவை ஆகும். மந்திரங்களில் பயன் படும் ஒவ்வோர் எழுத்திற்கும். ஒலிக்கும் வலிமையும், அந்த ஒலிக்கேற்ற அதிரும் வலிமையும் கொண்டவை.
பௌதீக விஞ்ஞானத்தில் ஒரு பொருள்தனது அதிர்வெண்ணிற்கு சமனான அதிர்வெண்ணில்; அருகில் உள்ள ஒரு பொருள் அதிர்ந்தால் தானாகவேஇந்த பொருள் அதிரும் என்று நிருபிக்கப்பட்டுள்து. அந்த தத்துவமே மந்திரங்களிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது நமது அண்டம் (ஆகாயம்) பலதரப்பட்ட சக்திகளால் நிறைந்தது என்பது விஞ்ஞானம் ஏற்றுக் கொண்ட உண்மை. இந்த அண்டத்திலிருக்கும் சக்திகளானது நாம் மந்திரங்களை உரிய அதிர்வுடன் ஜெபிக்கும் போது பாதிக்கப்படுகின்றன. நாம் ஜெபிக்கும் மந்திரத்தின் அதிர்விற்கு சமனான அதிர்வு கொண்ட சக்தி பாதிக்கப்பட்டு என்ன நோக்கத்திற்கு நாம் மந்திரம் ஜெபிக்கிறோமோ அந்த செயலைச் செய்கிறது.
மந்திரங்களைப் ஜெபித்து அதன் சக்தியை யந்திரங்களில் பதிவு செய்து பாதுகாத்த முறைப்படி பூசை செய்து வணங்கி வந்தால், நாம் பல நன்மைகளை இதன் மூலம் பெறமுடியும்.
-------------------------------------------------------------------------------------------
ியலின் படி ஒரு மனிதன் முன்னூறு ஆண்டுகள் வாழ்வதெல்லாம் சாத்தியமல்ல என்பது பல காலம் முன்னரே நிரூபிக்கப் பட்ட ஒன்று.இருந்தாலும் சித்தர்கள் பலநூறு வருடங்கள் வாழ்ந்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. ஹோமங்கள் செய்வதன் மூலமாக ஒருவன் முன்னூறு வயதுவரை வாழலாம் என்கிறார் அகத்தியர், இதன் சாத்தியங்கள் ஆய்வுக்குறியது. எனினும் நீண்ட ஆயுளைத் தரும் என்கிறவகையில் இந்த ஹோமத்தினை அணுகிடலாம். ஹோமங்கள் பற்றி அகத்தியரின் பாடல் ...
அறிந்துகொண்டு புவனையுட மந்திரந்தன்னால்
அப்பனே நெய்தனிலே அருகுதோய்த்து
தெரிந்தந்த ஓமகுண்டந் தன்னில்மைந்தா
சிறப்பான ஓமமது தீர்க்கமாக
வருந்திநன்றாய் மண்டலமே செய்தாயாகில்
மகத்தான பிரமமய மாவாய்பாரு
இருந்துரெண்டு மண்டலமே ஓமஞ்செய்தால்
என்னசொல்வேன் முன்னூறு வயதாம்பாரே
பொருள்: அறுகோண வடிவத்தை உடைய ஓம குண்டம் செய்து, அதில் வன்னி மரத்தின் குச்சிகளைக் கொண்டு தீ வளர்த்திட வேண்டுமாம். அப்படி தீவளர்க்கையில் வழமை போலவே அக்கினி மூல மந்திரமான ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா என்ற மந்திரத்தை சொல்லி தீ வளர்த்திட வேண்டும். தீ வளர்ந்த பின்னர் புவனையின் மூல மந்திரமான ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபிசுவாகா என்ற மந்திரத்தைக் கூறிக் கொண்டே அறுகினை, பசு நெய்யில் தோய்த்து போட வேண்டும் என்கிறார். இப்படி 1008 முறை செய்திட வேண்டும் என்கிறார் அகத்தியர். இந்த ஹோமத்தினை தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் செய்து வந்தால் பிரம்மத்தை உணரலாமாம். அதையே தொடர்ந்து இரண்டு மண்டலம்அதாவது 96 நாட்கள் செய்து வர 300வயதுக்கு மேல் வாழலாம் என்கிறார் அகத்தியர்
------------------------------------------------------------------------------------------------------

-----------------------------------------------------------------------------------------------------------

ஒ ரு குருவும் அவருடைய சீடர்களுடம் ஆற்றங்கரையோரம் கலகலப்பாகப் பேசிக்கொண்டே சென்றனர்.
ஒரு சீடன் கேட்டான், ‘குருவே, பூர்வாசிரமத்தில் நீங்கள் ஒரு பெரிய போர் வீரராக இருந்ததாகவும், பல நாடுகளுக்குப் பயணம் செய்து வெற்றிமேல் வெற்றிகளைக் குவித்ததாகவும் மூத்த சீடர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்… நிஜம்தானா?’
‘நிஜம்தான்.. ஆனால் அதெல்லாம் அந்தக் காலம். இப்போது நான் ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டேன்…!’ என்றார் குரு.
‘ஏன் குருவே? போர் தவறா… ஆயுதங்களே வேண்டாமா?’
‘சரி தவறு என்பதல்ல என் வாதம்… ஒரு கட்டத்துக்குமேல் புத்திக் கூர்மையும் அமைதியையும் விட சிறந்த ஆயுதம் எதுவும் இல்லை என்று புரிந்துவிட்டது எனக்கு!”
குருவின் வார்த்தைகளில் சீடர்களுக்கு நம்பிக்கை பிறக்கவில்லை. அவரை சோதித்துப் பார்த்துவிட முடிவு செய்து, ஒரு திட்டம் போட்டனர்.
‘நாளை குரு தியானத்தில் இருக்கும்போது, நாம் இருவரும் மறைந்திருந்து அவரைத் தாக்குவோம். அப்போது அவர் ஆயுதங்களை எடுக்காமல் நம்மை எப்படிச் சமாளிக்கிறார் என்று பார்ப்போம்,’ என்று முடிவு செய்தனர்.
மறுநாள் வகுப்புகள் முடிந்ததும், குரு வழக்கம்போல தியானத்தில் ஆழந்துவிட, இந்த இரு சீடர்கள் மட்டும் ஓலை தட்டிகளுக்கு அப்பால் மறைந்து கொண்டனர்.
சில நிமிடங்கள் கழித்து இருவரும் மெல்ல வெளியில் வந்தனர். பேசி வைத்தபடி இருவரும் குருவின் மீது ஏக காலத்தில் இரு பக்கமிருந்தும் பாய்ந்தனர்.
குரு முகத்தில் எந்த சலனமும் இல்லை. அவர்கள் பக்கத்தில் நெருங்கும்வரை கண்மூடி அமைதியாக இருந்த குரு, கடைசி விநாடியில் சற்று முன்னே வந்து குனிந்துகொண்டார். சீடர்கள் இருவரும் மடேர் என்று மோதிக் கொண்டு தரையில் விழுந்து உருண்டனர்.
எதுவும் நடக்காததுபோல் தியானத்தைத் தொடர்ந்தார் குரு!
குழப்பம் குருவே குழப்பம்!
பு கழ்பெற்ற துறவி அவர்.
அவருக்கு ஏராளமான மாணவர்கள். ஒருநாள், அந்த துறவியின் பழைய மாணவர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார்.
பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பிறகு, ‘குருவே, எனக்கு ஒரு குழப்பம்,’ என்று ஆரம்பித்தார் மாணவர்.
‘என்ன?’
‘நான் உங்களிடம் படித்த தியானத்தை முறையாகத்தான் பின்பற்றுகிறேன். கவனமாகத்தான் செய்கிறேன். அவை எனக்கு மிகுந்த மன அமைதியையும் புத்திக்கூர்மையையும் தருகின்றன. அதை அனுபவபூர்வமாக உணர்கிறேன்!’
‘மகிழ்ச்சி. மகிழ்ச்சி… இதில் என்ன குழப்பம்?’
‘நான் தியானத்தில் இல்லாத வேளைகளில் முழுமையான நல்லவனாக இருக்கிறேனா என்ற சந்தேகம் இருக்கிறது. அது எனக்கே சில நேரங்களில் தெரிகிறது. சில நாள்களில் நானும் ஒன்றிரண்டு தவறுகளைச் செய்கிறேன். தியானம் பழகிய ஒருவன் இப்படிச் செய்வது சரிதானா? இதை யோசிக்கும்போது என் உள்ளம் குன்றிச் சிறுத்துவிடுகிறது!”
குருநாதர் சிரித்தார். ‘ஆக… நீ தியானமும் செய்கிறாய், தவறுகளும் செய்கிறாய், அப்படித்தானே…?’
‘ஆமாம் குருவே. அது தவறில்லையா?’
‘இல்லை. நீ தினமும் தியானம் செய்,தினமும் தவறு செய், தினமும் தியானம் செய், தினமும் தவறு செய், கொஞ்ச நாளில் இதில் ஏதேனும் ஒன்று நின்றுவிடும்!’
‘அய்யோ.. ஒருவேளை தவறு நிற்பதற்குப் பதில் தியானம் நின்றுவிட்டால்?’
‘அதுவும் நல்லதுதான். உன்னுடைய இயல்பு எது என்று புரிந்துவிடும் இல்லையா?!”----------------------------------------------------------------------------------------------------
ஜ ப்பானில் ஒரு புகழ்பெற்ற ஜென் குரு அவர். அவருக்கு சுவோ என்று ஒரு சீடர். அவர் நல்ல ஆசிரியரும்கூட.
ஒரு கோடையில், ஜப்பானின் தென் தீவிலிருந்து ஒரு மாணவன் வந்தான், தத்துவம் பயில.
அவனை சுவோவிடம் அனுப்பினார் தலைமை குரு. மாணவனுக்கு முதல் பரீட்சை வைத்தார் சுவோ.
“உனக்கு ஒரு கை ஓசை கேட்கிறதா?” – இதுதான் அந்த சோதனை.
அவனுக்குக் கேட்கவில்லை. அந்த சோதனையில் தேர்ந்தால்தான் சுவோவிடம் பயிற்சி பெற முடியும். எனவே ஒரு கை ஓசையைக் கேட்க அவன் காத்திருந்தான்…. வாரக் கணக்கில் அல்ல… மாதக் கணக்கில் அல்ல.. ஆண்டுக் கணக்கில். ஆண்டுகள் மூன்று முழுசாய் ஓடின!
ஒரு இரவில், சுவோவிடம் வந்தான் மாணவன்.
“என்னால் உங்கள் சோதனையில் தேர்ச்சி பெற முடியவில்லை. அவமானம், தர்மசங்கடத்தைச் சுமந்தபடி என் தீவுக்குச் செல்கிறேன்…” என்றான்.
“தம்பி.. அவசரப்படாதே.. இன்னும் ஒரு வாரம் எடுத்துக் கொள். நன்றாக தியானம் செய்..” என்றார் சுவோ.
ஒரு வாரம் கழிந்தது. மாணவனுக்கு ஒரு கை ஓசை கேட்கவே இல்லை. மீண்டும் சுவோவிடம் வந்தான். அவர் “இன்னும் ஒரு வாரம் முயற்சி பண்ணுப்பா” என்றார். ஆனால் அவன் முயற்சிக்கு வெற்றி கிட்டவில்லை.
மேலும் ஒரு வாரம் கெடு கொடுத்தார் சுவோ. அப்போதும் விடை கிடைக்கவில்லை மாணவனுக்கு.
மிகுந்த ஏமாற்றமும் சோர்வுமாக வந்த மாணவன், ‘போதும் குருவே, நான் போகிறேன்’, என்றான்.
சரி, ஒரு ஐந்து நாள் மட்டும் இருந்து பார்த்துவிட்டுப் போ என்றார் சுவோ. அந்த ஐந்து நாட்களில் அவனால் எதையும் உணர முடியவில்லை. மீண்டும் சுவோவிடம் வந்து உதட்டைப் பிதுக்கினான்.
இந்த முறை சுவோ இப்படிச் சொன்னார்:
“சரி, கடைசியாக மூன்று தினங்கள்.இந்த மூன்று தினங்களில் உன்னால்இந்த சோதனைக்கான விடையைக் காண முடியாவிட்டால், செத்துப் போ,” என்றார் கண்டிப்பு மிக்க குரலில்.
மாணவன் தன் அறைக்குத் திரும்பினான். இரண்டாம் நாள் வந்தான்.. “குருவே.. ஒரு கை ஓசை கேட்டது… நான் தேடி வந்தது கிடைத்தது,” என்றான.

---------------------------------------------------------------------------------------------------------------

ஓர் ஊரின் வெளிப்புறப் பகுதியில் ஜென் துறவி ஒருவர் தன் குடிலில் இருந்தபடி பொதுமக்களுக்கு நல்லன சொல்லி வந்தாராம். அவருடைய குடிலில் வேலை பார்த்த ஒரு பெண் திடீரென்று கர்ப்பமாகி விட்டாளாம். அவளுடைய அப்பா கோபமாகி அவளை அடித்து “உன்னுடையகர்ப்பத்துக்கு யார் காரணம்?” என்று கேட்க, அவள் அந்த ஜென் துறவி தான் காரணம் என்று கைகாட்டினாளாம்.
ஊரே திரண்டு “அடப்பாவி! நீ இவ்வளவு கேவலமானவனா? போலி சாமியாரே! இப்படி நீ செய்யலாமா?” என்று காறி உமிழ அவர் சாதாரணமாக “அப்படியா?” என்றாராம்.
ஊரே அவரை ஒதுக்கி விட்டதாம். புதிதாக ஊருக்கு வருபவர்கள் அந்தத் துறவியைப் பார்க்க வரும்போது, “என்னய்யா, உங்களைப் பற்றிஊரில் இப்படி எல்லாம் பேசுகிறார்களே” என்று கேட்பார்களாம். அவர், சாதாரணமாக “அப்படியா?” என்பாராம்.
அந்த வேலைக்காரிக்கு தான் சொன்னபச்சைப் பொய் உறுத்திக் கொண்டே தூங்க ஒட்டாமல் செய்ததாம். ஒருநாள் ரகசியமாக துறவியைச் சந்தித்து சந்தர்ப்பவசத்தால் தான் பொய் சொல்ல நேர்ந்ததைச் சொல்லி அழுதாளாம். அந்தத் துறவி,“அப்படியா?” என்பதற்கு மேல் ஒருவார்த்தை பேசவில்லையாம்.
நாட்கள் நகர அந்த வேலைக்காரிக்குக் குழந்தை பிறந்ததாம். குழந்தை அவளுடைய அத்தைமகன் ஜாடையில் இருக்க, ஊராருக்கு உண்மை தெரிந்ததாம். அடடா, அந்த நல்லவரை அப்படிப் பேசி விட்டோமே என்று வருந்தி அவரிடம் வந்து மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள். அவர் அதற்கும் “அப்படியா?” என்றாராம் சாதாரணமாக.
பலசமயங்களில் சத்தியம் என்பது முட்டைக்குள் இருக்கும் கரு போன்றது. அதனைப் பொறுமையுடன் அடை காத்தால் அன்றி அதற்கு உயிர் கொடுக்க முடியாது. நம் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு ஆதாரம் தேவை இல்லை; நம்பிக்கை இழந்தவர்களிடம் காட்டப்படும் ஆதாரம் மட்டும் எப்படி நம்பகமாகக் கருதப்படும்? பேசுபவரின் குரல் எவ்வளவுக்கு உயருகிறதோ அவ்வளவுக்கு கேட்பவருக்கு நம்பகத் தன்மை குறையும் என்பது பொது நீதி.